ஆன்லைன் மோசடி: பொறியாளரிடம் ரூ.15.57 லட்சம் பறிப்பு

இணையவழி வர்த்தகம் எனக் கூறி தஞ்சாவூரைச் சேர்ந்த பொறியாளரிடம் ரூ.15.57 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். 32 வயது பொறியாளரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஜனவரி 9-ஆம் தேதி வந்த பதிவில் இணையவழி வர்த்தகம் செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல் வந்தது. இதையடுத்து, எதிர்முனையில் இருந்த மர்ம நபருடன் தகவல் பரிமாற்றம் செய்தார். தொடர்ந்து, அவர்கள் ஆசைவார்த்தை கூறி பணத்தை பறித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி