வெங்காய விலை குவிண்டால் ரூ.2,500 ஆக சரிவு

கர்நாடகாவின் கதக் ஏபிஎம்சி (APMC) சந்தையில், 4 நாட்களுக்கு முன்பு குவிண்டாலுக்கு ரூ.6,000-ஆக இருந்த வெங்காயத்தின் விலை, தற்போது ரூ.2,500-ஆக கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கு இடைத்தரகர்களின் தந்திரமான செயல்களே காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கடும் வறட்சியையும் கடந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு, முதலீட்டைக் கூட எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕