இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது பங்களிப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ஒன்பிளஸ் நிறுவனம் புதிய திட்டத்துடன் களம் இறங்குகிறது. நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ரூ.20,000-க்குள் விலை கொண்ட 'N சீரிஸ்' என்ற புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ரக ஸ்மார்ட்போன்கள் வரும் ஜூலை மாதம் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.