விராட் கோலி இணை உரிமையாளராக இருந்த ‘ஒன்8’ ஹோட்டல் மூடல்

பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கிரிக்கெட் வீரர் விராட் கோலி இணை உரிமையாளராக இருந்த 'ஒன்8 கம்யூன்' ஹோட்டல், சுமார் ரூ.2 கோடி வாடகை பாக்கி காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது. கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்த வாடகை மற்றும் தீ பாதுகாப்பு விதிமீறல் தொடர்பான புகார்களால் எழுந்த நெருக்கடியை தொடர்ந்து, கோலி ஏற்கனவே இந்த ஹோட்டலுடனான தனது ஒப்பந்தத்தை முறித்து கொண்டு 'ஒன்8' என்ற தனது பிராண்ட் பெயரையும் நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி