'ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுக' - மு.க.ஸ்டாலின்

'ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுகதான்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ., 08) திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்று வரும் 'திமுக 75 அறிவு திருவிழா'வில் பேசிய அவர், 'ஏதோ கட்சியை ஆரம்பித்தோம், அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று திமுக ஆட்சிக்கு வரவில்லை. திமுகவை போல வெற்றி பெற திமுக போல அறிவும், உழைப்பும் வேண்டும். திமுகவின் வரலாறு தெரியாத சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

நன்றி: சன் செய்தி

தொடர்புடைய செய்தி