சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீலநாயக்கன்பட்டி பகுதியில் இன்று (பிப்., 13) விஜய் பரப்புரையில் பேசினார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தொண்டர்கள் பங்கேற்றிருந்த நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் என்பவர் உயிரிழந்தார். மயங்கி விழுந்தவரை மருத்துவமனைக்கு கொன்று செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நன்றி: சன் செய்தி