விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தவெக மாநாட்டில் கலந்துகொண்டு உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் வீடு கட்டிக்கொடுக்கும் பணி தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற சென்னையைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர், தங்களுக்கென சொந்தமாக வீடு இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர். இதனையறிந்த விஜய், உடனடியாக வீடு கட்டித் தர உத்தரவிட்டார். அதன்பேரில், வீட்டின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.