வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பரவக்கல் என்ற கிராமத்தில், குலதெய்வ கோயிலில் கற்பூரம் ஏற்றிக் காட்டிய போது, மேலே அரச மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிரிசியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி தேனீக்கள் கொட்டியதில் 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. உயிரிழந்த செந்தில்குமார் அதே பகுதியில் வெல்டிங் தொழிலாளியாக உள்ளார்.