தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழந்தார். மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியில், பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி மோட்டாரை புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நெல்லை மாவட்டம் பருத்தி குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற தூய்மைப் பணியாளர், விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சக பணியாளர் சங்கர் அவரை மீட்க முயன்றபோது அவரும் மயக்கமடைந்தார். தீயணைப்புத் துறையினர் போராடி ராஜாவின் உடலை மீட்டனர். சிப்காட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி