“பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் LED தெருவிளக்குகள் அமைக்கப்படும்” என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் வெளிச்சம் அதிகரிக்கப்பட்டு, பாதுகாப்பான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமின்றி பயணிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.