குப்பைமேடு சரிந்த விபத்தில் ஒருவர் பலி.. 27 பேர் மாயம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் குப்பைமேடு சரிந்த விபத்தில் 27 தொழிலாளர்கள் உள்ளே புதைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை 7 தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருக்கும் சூழலில் ஒரு தொழிலாளி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி, காணாமல் போன எஞ்சிய நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் அனைத்து மீட்புக் குழுக்களும் முழுமையாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி