கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அருகே சின்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (40) என்பவரது ஒன்றரை வயது குழுந்தை விஷ்ணுபிரியாவுக்கு, கடந்த 27ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், நேற்று (ஜூலை 30) மாலை 4 மணிக்கு குழந்தை இறந்தது. மருத்துவமனையில் நேற்று இரவு அதிக டோஸ் மருந்து செலுத்தியதால் தான் குழந்தை உயிரிழந்ததாக தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.