ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ‘Al டாக்டர்' வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். பில் கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து இதற்கென பிரத்தியேக AI மாடலை உருவாக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் சுகாதார தரவுகளை டிஜிட்டல் மயமாக்கி, ஸ்மார்ட்ஃபோன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் Al மாடல் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.