தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று (நவ.10) பக்கத்து மாநிலங்களுக்கிடையே ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை வரி விதிப்பு காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆம்னி பேருந்து சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தது. மேலும், புதுச்சேரி ஆம்னி பேருந்து சங்கமும் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆம்னி பேருந்துகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.