கேரள மாநிலத்திற்குச் சென்ற தமிழக ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், கேரள அரசு ரூ.70 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சுமார் 30 ஆம்னி பேருந்துகள் சிறைபிடித்த கேரள அதிகாரிகள், பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றனர். இதனால், இன்று முதல் கேரளாவுக்கு பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
நன்றி: PT