ஆம்னி பேருந்து பயணிகளிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி வழங்கப்பட்டது

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம், சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையில் விதிமீறலில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, பயணிகளிடம் கூடுதலாக பெறப்பட்ட தொகை அங்கேயே உடனடியாக திரும்ப பெற்று வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி