பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட 3 மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, சென்னை-நெல்லைக்கு ரூ.4,200, மதுரைக்கு ரூ.3,500 மற்றும் கோவைக்கு ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்த போதிலும் கட்டண உயர்வு குறையவில்லை என புகார் எழுந்துள்ளது.