ஆம்னி பேருந்து கட்டணம் மளமளவென குறைந்தது: பயணிகள் நிம்மதி

தீபாவளிக்கு முன்னிட்டு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணம், தற்போது அரசு பேச்சுவார்த்தைக்கு பிறகு கணிசமாக குறைந்துள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. உதாரணமாக, சென்னை-நெல்லை செல்ல முன்பு ரூ. 5,000 வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், தற்போது ரூ. 3,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதைப்போல பிற ஊர்களுக்கான டிக்கெட் விலையும் குறைந்துள்ளதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி