இன்றும் உயர்ந்து காணப்படும் ஆம்னி பேருந்து கட்டணம்

பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் தங்கி உள்ள பலரும் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்ல தொடங்கி உள்ளனர். இந்நிலையில் இன்றும் (ஜன.13) ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தும், ஆன்லைனில் ரூ.3000 வரையும் பேருந்து நிலையங்களில் நேரில் சென்று புக் செய்தால் ரூ.4,200 வரை பேருந்து கட்டணம் கேட்பதாக பயணிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி