ஆற்றில் பாய்ந்த ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி

பெங்களூருவிலிருந்து கொல்லம் சென்ற ஆம்னி பேருந்து, நாகர்கோவில் அருகே பைக் மீது மோதி வள்ளியாற்றில் பாய்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். ஆற்றில் செங்குத்தாக நின்ற பேருந்தில் சிக்கிய 30 பயணிகளை தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பத்திரமாக மீட்டனர். அதிவேகமாக சென்றதே விபத்திற்கு காரணம் என கூறப்படும் நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி:Polimer

தொடர்புடைய செய்தி