தனுஷின் 55-வது படமான ‘ஓம்’ படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் மம்மூட்டி ‘சியா’ என்ற வில்லன் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையில் உருவான முதல் பாடல் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மம்மூட்டிக்கான பிரத்யேக கிளிம்ஸ் வீடியோ செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அக்டோபர் 16-ல் திரைக்கு வருகிறது.