செங்கல்பட்டு மேல்மருவத்தூர் அடுத்த கீழாமூர் கிராமத்தில் மூதாட்டி முத்தமாளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால் மகன்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர். நகைக்காக மூதாட்டியை கீழே தள்ளி கொலை செய்ததாக எதிர் வீட்டுக்காரரும், தவெக கிளை பொறுப்பாளருமான வாசுதேவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.