கர்நாடகாவில் ஓலா, ஊபர், ரேபிடோ பைக் டாக்ஸி உரிமங்கள் ரத்து

கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆகிய நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தற்காலிக உரிமங்களை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி மின்சார பைக்குகளை மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனங்கள் விதிகளுக்கு புறம்பாக பெட்ரோல் பைக்குகளை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து, இந்த நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவைகளுக்குத் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி