கரூர் வெண்ணைமலை கோயில் நிலத்தில் இருந்த வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்க சென்ற நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கண்ணம்மாள் என்பவரின் வீட்டிற்கு சீல் வைக்க சென்றபோது, அவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நன்றி: NewsTamilTV24x7