அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 22.9% உயர்வு

கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,31,290 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைக் காட்டிலும் 22.9 சதவீதம் அதிகமாகும் நிலையில், நிகர ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,03,356 கோடியாகப் பதிவாகியுள்ளது. இதில் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி வரிப் பங்காக ரூ.7,460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕