பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ஜாலாய் காவல் நிலைய பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப் 24) அப்பகுதி ஆண்களால் பார் நடனக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு நடந்த திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு கூடியிருந்தவர்களும் பார் நடனக்கலைஞர்களுடன் மது அருந்திவிட்டு முகம்சுளிக்கும் வகையில் நடனம் ஆடியுள்ளனர்.