கோயில் திருவிழாக்களில் ஆபாச கரகாட்டம்: நீதிமன்றம் எச்சரிக்கை

கோயில் திருவிழாக்களில் கரகாட்டம் என்ற பெயரில் ஆபாச உடைகளுடன் நடனம் ஆடினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரியலூர் மாவட்டம் பாப்பாத்தம்மன் கோயில் திருவிழா வழக்கு விசாரணையின்போது நீதிபதி லட்சுமி நாராயணன் இந்த உத்தரவை பிறப்பித்தார். நீதிமன்ற நிபந்தனைகளை மீறி ஆபாச நடனம் ஆடுபவர்கள் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி