முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு திமுகவில் இணைந்து தற்போது எம்எல்ஏவாக உள்ளார். திமுகவில் சேர்வதற்கு முன், அமைச்சர் செங்கோட்டையன் அவரை தவெகவில் இணைக்க முயன்றதாகவும், ஆனால் அவர் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. "செங்கோட்டையன் கூறியதை அன்றே கேட்டிருக்கலாம்" என அவர் வருத்தப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. தவெகவில் இணைந்து வெற்றி பெற்றிருந்தால், தற்போது அவருக்கு சபாநாயகர் பதவி அல்லது துணை முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என பேசப்படுகிறது.