அதிமுக கூட்டணிக்கு வைகோ வரமாட்டார் என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் பொய் சொன்னதாக வைகோ கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த ஓபிஓஎஸ், "14 ஆண்டுகளுக்கு பின் வைகோ இதை கூறுவது ஏன்? வைகோவின் மனம் புண்படும் என்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. நான் பதில் கூற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விரும்பினால் அதற்கு பதில் கூறுவேன்" என கூறியுள்ளார்.