நடிகர் ரஜினிகாந்த் உடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். இன்று (அக்.16) தனது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உடன் சென்ற ஓபிஎஸ்,  ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் ஆகியோருக்கு  பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.  இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி