சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களில் தீவிர அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்க தேனி மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்யப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போடி நாயக்கனூர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுகவும் அவரை தோற்கடிக்க வலுவான வேட்பாளரை நிறுத்த வியூகம் வகுத்துள்ளது.