வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிராக இன்று (அக்.27) நடந்த 3-வது டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, ஓப்பனர்கள் வைபவ் சூர்யவன்ஷி 45, அபிஷேக் சர்மா 113 ஆகியோரின் அதிரடியால் 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியுள்ளது.