தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த செவிலியர்கள் முடிவு

அரசு மருத்துவமனைகளில் 4,724 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை கண்டித்து, வரும் செப்.18-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது. மேலும், தங்களுக்கு ஏற்படும் பணிச்சுமையால் நால்வர் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் மட்டுமே செய்து வருவதாக அச்சங்கம் வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பணிப் பாதுகாப்பையும் நியாயமான பணிச் சூழலையும் வலியுறுத்தி, இப்போராட்டம் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕