30ம் தேதி செவிலியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்

4,724 செவிலியர் பணியிடங்களை 2 ஆண்டு கால தற்காலிக அடிப்படையில் மட்டுமே நிரப்ப வகைசெய்யும் அரசாணைக்குத் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் நிரந்தரப் பணியாளர்களே இருக்கக் கூடாது என்ற நோக்கில் அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அச்சங்கம், இக்கோரிக்கையை வலியுறுத்தி செப். 28, 29-ல் கறுப்புப் பட்டை அணிந்தும், செப். 30 அன்று சென்னை சிவானந்த சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕