கணவருக்கு ஆசிட் ஊசி போட்டு கொன்ற நர்ஸ்

தெலங்கானாவில் கள்ளக்காதலுக்காக கணவரை முதலில் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, ஆசிட்டை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொலை செய்துள்ளார். நிஜாமாமாபாத்தைச் சேர்ந்த சந்தியா என்ற செவிலியர், தனது கணவர் பிரசாந்தை, கள்ளக்காதலன் அனில் மற்றும் நண்பருடன் சேர்ந்து கொன்றுள்ளார். பிரசாந்தின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொடூர சதி அம்பலமானது. மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி