NTPC-யில் 135 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 135 காலிப்பணியிடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் அல்லது கண்ட்ரோல் & இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்று, அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 40 ஆகும். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ntpc.co.in இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி

✕
✕