மேகதாது விவகாரம்.. நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்

மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் நீர்வளத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றும், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் வறட்சியை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் திமுக தெரிவித்துள்ளது. இந்த முக்கியமான பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என திமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி