இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கண்பார்வையற்றோர் மற்றும் கல்வியறிவில் குறைவான வாடிக்கையாளர்களுக்காக குரல் வழி யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புதிய வசதியால் வாடிக்கையாளர்கள் குரல் கட்டளைகள் மூலம் எளிதாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.