நவம்பர் 18: இன்றைய தலைப்பு செய்திகள்

பீகார் வெற்றிக்கு காரணமே S.I.R. நடைமுறைதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிகக் கனமழைக்கான வாய்ப்புள்ளது. கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் உலா வந்த கருஞ்சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சம். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும். நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்தக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி