சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'குபேரா'. இப்படம் வரும் ஜூன் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ டிரெய்லர் வெளியீடு நிகழ்ச்சி நேற்று (ஜூன் 15) ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய ராஷ்மிகா, "அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எதுவும் நிரந்தரம் இல்லை என புரிந்தது. எனவே அனைவரிடமும் கருணையுடன் இருங்கள்" என உருக்கமாக கூறினார்.