நார்வே செஸ் 2026 தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, குகேஷ் மற்றும் மகளிர் பிரிவில் திவ்யா தேஷ்முக் ஆகியோர் அர்மகெடான் டைபிரேக்கரில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். உலக சாம்பியன் ஜு வெஞ்சனை திவ்யா வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை பிரான்சின் அலிரேசா பிரூஸ்ஜா கிளாசிகல் ஆட்டத்திலேயே வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளார்.