வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தமிழக நீர்வளத்துறைக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த முன்னெச்சரிக்கை நிதியின் மூலம், இம்முறை ஆறுகள் மற்றும் கால்வாய்கள் அடங்கிய 202 முக்கிய இடங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.