வடகிழக்கு பருவமழை.. பேருந்து ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, தொலைதூர பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் மிகுந்த கவனத்துடன் இயக்க வேண்டும் என்றும், சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் மழைநீர் ஒழுகுவது போன்ற குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி