வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவின் இந்தச் செயலை 'ஏகாதிபத்திய அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது' என்று கடுமையாகக் கண்டித்துள்ளார். மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அமெரிக்கா நெருப்போடு விளையாடுவதாகவும், மூன்றாம் உலகப்போர் தொடங்கினால் எதிர்கொள்ளத் தயார் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.