தொழில்நுட்ப உலகத்தில் அனைத்தும் ஆன்லைன் மூலமாக எளிதில் கிடைக்கிறது. இதனால் மக்கள் சத்தான உணவு பொருட்களை தேடிச் சென்று வாங்குவதில் சோம்பேறி தனம் காட்டுகின்றனர். இது போல ஆன்லைன் மூலம் கிடைக்கும் உணவு பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். குறைவான விலையில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தரமாக இருக்காது என்பதை மக்கள் உணர வேண்டும் எனவும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.