கேரளாவில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையில் மாற்றம் செய்ய அம்மாநில பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கோடைக்காலமான ஏப்ரல், மே விடுமுறையை மழைக்காலமான ஜூன், ஜூலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த இரு மாதங்களும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், பெரும்பாலான நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, கோடை விடுமுறையை மாற்றியமைக்கவுள்ளதாக அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.