திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், வாக்குரிமையைப் பறிக்கும் SIR முறையை ரத்து செய்யவும், EVM-க்கு பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கி விசாரிக்க வேண்டும் எனவும், காங்கிரசின் இரட்டை நிலைப்பாடு மற்றும் தவெகவின் மவுனம் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: பாலிமர்