பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள் ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை. பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 7 நீதிபதிகளில் பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.
நன்றி: சன் நியூஸ்