விளையாட்டில் இந்தியா அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிப்பதை மறைமுகமாக விமர்சித்துள்ள அவர், இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட்டு இந்தியாவின் ஒருதலைப்பட்ச போக்கை நிறுத்த வேண்டும் என்றும், லீக் கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.