அதிமுக தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், சிறப்பான கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று (நவ.8) பேசிய அவர், “வரும் தேர்தலில் அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்கும். மக்களின் ஆதரவுடன் தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெறும்” என்றார். இதன் மூலம், அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மறுபுறம் தேமுதிக அல்லது பாமக-வை இபிஎஸ் குறிப்பிட்டு பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
நன்றி: NewsTamilTV24x7